Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சாவகச்சேரி வாகன விபத்தில் உயிரிழந்த 11 பேரின் சடலங்களும் விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டது

யாழ்பாணம் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த 11 பேரின் சடலங்களும் யாழ்பாணத்திலிருந்து விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த விபத்தில் ஹொரண பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உட்பட 11 பேர் உயிரிழந்திருந்தனர்.
வானொன்றும் பஸொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.
இவர்கள் யாழ்பாணத்திற்கு சுற்றுலா சென்றுகொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேற்றைய தினம் விமானப்படையினரின் உதவியுடன் விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து வாகனங்கள் மூலம் ஹொரணவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கையேடுக்கப்பட்டிருந்தது

Post a Comment

0 Comments