Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மீட்பு!

மட்டக்களப்பு – சவுக்கடிப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள், நேற்று (04) மாலை மைலம்பாவெளி முகாம் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
சவுக்கடிப் பகுதியில் மரமுந்திரிகைத் தேட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, உரப்பபை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கைக்குண்டுகள் 4, வெற்று மகசீன்கள் 2, ரீ56 ரக துப்பாக்கி ரவைகள் 4, சயனட் குப்பி மற்றும் அடையாளத்தகடு ஆகியன மீட்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments