மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு பிரதேசங்களில் நேற்று(04) நள்ளிரவு காட்டு யானைகள் உட்புகுந்து சேதம் விளைவித்துள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, வெல்லாவெளியில் 38ஆம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் ஆலயத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் ஆலயத்தின் பிரதான மண்டபத்தை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
அதே போன்று, காக்காச்சிவட்டை - பாலச்சோலை பிரதேசத்தில் உள்ள நெற்களஞ்சியசாலைக்குள் உட்புகுந்த யானைகள் அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 45 நெல் மூடைகளையும் களஞ்சியசாலையையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
0 Comments