மட்டக்களப்பு: சிங்கள இனவெறியுடன் புத்த பிக்கு ஒருவர் மட்டக்களப்பு தமிழ் கிராம சேகவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மட்டக்களப்பைச் சேர்ந்த அம்பிதியே சுமனா என்ற புத்த பிக்கு தமிழ் கிராம சேவகரை சிங்கள மொழியில் கேவலமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அந்த வீடியோவில் புத்த பிக்கு கூறியுள்ளதாவது:
நீ ஒரு புலி… உன்னை பார்க்கும் போதெல்லாம் என்னுடைய ரத்தம் கொதிக்கு… நீ ஒரு நாய்… நீ ஒரு தமிழ் கிராம சேவகர்.. எங்கள் சிங்களருக்கு எதிராக வழக்கு போடுவதை நிறுத்து… ஒரு சிங்களவரையும் அவங்க இடத்தில் இருந்து போக சொல்லக் கூடாது… நான் உங்களை சும்மாவிடமாட்டேன்… இதுதான் என்னுடைய கடைசி எச்சரிக்கை… இவ்வாறு அந்த புத்தபிக்கு ஆவேசமாக பேசுகிறார்… ஆனால் அங்கு இருக்கும் போலீசார் புத்த பிக்குவை தடுக்கவில்லை. கொலை மிரட்டல் விடுத்த பின்னர் ஒரு போலீஸ் அதிகாரி பிக்குவை அழைத்து செல்கிறார்
0 Comments