Advertisement

Responsive Advertisement

கல்முனையில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெருமளவான சிகரெட்டுகள் மீட்பு

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காடு பகுதியில் வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்கள் மற்றும் அதிக செறிவில் போதையூட்டப்பட்ட புகையிலைதூள்களை மதுவரித்திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் ஒருவரை கைது செய்துள்ளனர்.
நேற்று செவ்வாக்கிழமை நள்ளிரவு மாளிகைக்காடு பகுதியில் உள்ள வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்திலேயே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்திற்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் என்.சுசாதரன் தலைமையில் சென்ற குழுவினர் இந்த சட்ட விரோத போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
இந்த பொருட்கள் சலவைத்தூள் அடைக்கப்பட்டு இந்த சிகரெட்டுகளும் போதையூட்டப்பட்ட புகையிலைதூள்களும் வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டத்திற்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் என்.சுசாதரன் தெரிவித்தார்.
இதன்போது 3000 சிகரெட்டுகளும் ஆறரைக்கிலோகிராம் நிக்கோட்டின் செறிவு கூடிய புகையிலையில் தயாரிக்கப்பட்ட மாற்றீடுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்திற்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் என்.சுசாதரன் தலைமையில் சென்ற கல்முனை மதுவரித்திணைக்கள பரிசோதகர் ப.காண்டிபன், மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்களான எஸ்.குகநேசன், எஸ்.செல்வராஜா, எஸ்.ரமேஸ், பயிற்சி உத்தியோகத்தர்களான எஸ்.திலோஜன்,லோ.சுபோஸ்குமார் ஆகிய குழுவினரே இந்த முற்றுகையினை நடாத்தியுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர் தப்பியோட முற்பட்டபோது அவரை துரத்திச்சென்று கைது செய்துள்ளதாகவும் பொருட்களையும் கைது செய்யப்பட்டவரையும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்திற்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் என்.சுசாதரன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments