முத்தரப்பு ஒருநாள் போட்டியின் இன்றைய போட்டியில் இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியதீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதனையடுத்து இலங்கை அணியின் தனஞ்சய டி சில்வா, குசல் பெரேரா களமிறங்கினர். 7 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பெரேரா ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
தொடர்ந்து தனஞ்சய டி சில்வாவுடன் இணைந்த நிரோஷன் டிக்வெல்ல 106 பந்துகளுக்கு 94 ஓட்டங்களை பெற்றிருந்த போது எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்து வந்த குசால் மெண்டிசும் 73 பந்துகளில் 94 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் இலங்கை அணியின் ஓட்டங்கள் மளமளவென உயர்ந்தது, அடுத்து வந்த உபுல் தரங்கா மற்றும் சஜித் பத்திரன இரட்டை இலக்க ஓட்டங்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
முடிவில் இலங்கை அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து, 50 ஓவரில் 330 ஓட்டங்கள் எடுத்து மேற்கிந்திய தீவுகளுக்கு கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.

0 Comments