Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அனுமதிப்பத்திரம் இன்றி போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களுக்கான அபராதம் அதிகரிப்பு

உரிய அனுமதிப்பத்திரம் இன்றி போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களுக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயணிகள் போக்குரத்தில் ஈடுபடுவதற்கு உரிய அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளாமல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களுக்கான அபராதத் தொகை பாரியளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுவரையில் இந்த அபராதத் தொகை பத்தாயிரம் ரூபாவாக காணப்பட்டது. எனினும் தற்போது இந்த அபராதத் தொகை 200000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இல்லாமல் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளதாகவும் அபராதத் தொகை அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments