Advertisement

Responsive Advertisement

இனவாதத்தை தூண்டினால் பயங்கரவாத தடைசட்டம் பாயும் : நீதி அமைச்சர் எச்சரிக்கை

இனவாதம் அல்லது மத வாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தையும் பிரயோகிக்கலம் என நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியலில் குதிக்கும் நோக்கத்துடன் சில பிக்குமார் இனவாதத்தை தூண்டி பௌத்த மக்களை கவர முயல்வதோடு, முஸ்லிம் அமைப்புக்களுக்கிடையிலான மோதல் காரணமாக உள்ளக பிரச்சினை தேசிய பிரச்சினையாக மாறி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் இனவாதம் அல்லது மத வாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையெடுக்கப்படும். அத்துடன் அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தையும் பிரயோகிக்கலம் என அவர் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments