Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாதுகாப்பு வேலி சில நபர்களால் உடைத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கம் பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான கண்ணகியம்மன் ஆலயத்திற்கு முன்னாள் உள்ள காணிப் பகுதியின் பாதுகாப்பு வேலி சில நபர்களால் உடைத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக இன்று மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கம் பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான காணியின் கண்ணகியம்மன் ஆலயத்திற்கு முன்னாள் உள்ள காணிப் பகுதியின் பாதுகாப்பு வேலி சில நபர்களால் உடைத்து நாசமாக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக ஆலய வண்ணக்கர்மார்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கப்பிள்ளையார் ஆலய தலைவர் மயில்வாகனம் அரசரட்ணம் தெரிவித்தார் .
குறித்த சம்பவம் தொடர்பாக செய்யப்பட முறைப்பாட்டுக்கு அமைவாக குறித்த இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிசார் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் மற்றும் அமிர்தகழி கிராம சேவை உத்தியோகத்தர் பார்வையிட்டதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கம் பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான காணிகள் சிலரால் கடந்த காலத்தில் அத்துமீறிய வகையில் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக ஆலயத்திற்கு சொந்தமான காணிகளை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை ஆலய நிர்வாகத்தினை மேற்கொண்டுவருவதாகவும் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கப்பிள்ளையார் ஆலய தலைவர் மயில்வாகனம் அரசரட்ணம் தெரிவித்தார் .

Post a Comment

0 Comments