சிங்கள இசையுலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் பழம்பெரும் இசையமைப்பாளரும் பாடகருமான மறைந்த கலாநிதி பண்டித் அமரதேவவின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை 10 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது.
வித்துவான் பண்டித் அமரதேவ அவர்களுக்கு இலங்கை வரலாற்றில் கலைஞர் ஒருவருக்கு வழங்கப்படும் உயர் கௌரவத்தை வழங்கி, சுதந்திர சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட மேடையில் வைப்பதற்காக இன்று பிற்பகல் அன்னாரின் பூதவுடலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கொண்டுவரப்பட்டது.
இதன்போது அவரது உடல் அடங்கிய பேழையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாங்கி வந்தார். நாட்டின் ஜனாதிபதி ஒருவரால் கலைஞர் ஒருவரின் உடல் இவ்வாறு தாங்கி வரப்பட்டமை வராலாற்று முதன் முறையாகும்.
குறித்த ஊர்வலத்தில் ஜனாதிபதியுடன் அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, கயந்த கருணாதிலக உள்ளிட்ட அரச தலைவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.
காலஞ்சென்ற பிரபல மூத்த சிங்களமொழிப் பாடகர் டபிள்யூ.டி. அமரதேவவின் இறுதிக் கிரியைகள் நாளை சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பூரண அரச மரியாதையுடன் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.







0 comments: