யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று காலை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஐந்து பொலிஸாரும் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எஸ். சதீஸ்கரன் உத்தரவிடப்பட்டுள்ளார்.
உயிரிழந்த மாணவர்கள் இருவர் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகினர்.
0 Comments