சமயம் என்பது சமைத்தல்என்னும் வினையடியில் இருந்து பிறந்தது என்கிறார்கள் மொழியியலாளர்கள். இது தவிர, ஒழுங்குபடுத்துதல்,நெறிப்படுத்துதல், வழிப்படுத்துதல், முறைப்படுத்துதல் என்றும் இதற்கு பொருள் உண்டு.
ஆனால், இலங்கையில்அதிகாரத்தில் இருக்கும் ஒரு சமயம் அவ்வாறு நடந்து கொள்கிறதா என்னும் சந்தேகம் காலம்தோறும் எழுந்து கொண்டிருப்பது சாதனைக்குரிய நிகழ்வு தான்.
இலங்கையில் பௌத்தம்தோன்றிய வரலாறு பற்றி பல்வேறு கருத்துக்களும், சான்றுகளையும், மகாவம்சம் எடுத்துரைக்கிறது.
இந்தியாவில் அசோகச் சக்கரவர்த்தி ஆட்சியில் இருந்த காலத்தில் மகிந்ததேரர் இலங்கை வந்ததாகவும், அவர் வரும் போது தேவநம்பியதீசன் தன் அரசசபைக்கு அழைத்துவந்து பிரச்சாரம் செய்ய வைத்ததாகவும்வரலாறு உண்டு.
அசோகச் சக்கரவர்த்தி கலிங்கப்போரின் பின்னர் ஏற்பட்ட அழிவுகளைக் கண்டு மனவேதனையடைந்து, அதில் இருந்து விடுபடபௌத்தத்தைப் பின்பற்றினார்.
பௌத்தமே தர்மத்தின்ஆதாரம் என்றும், அதுவே, மக்களை நெறிப்படுத்தும் என்றும் உணர்ந்த அவர், இந்திய தேசம்மட்டுமல்ல கடல் கடந்து இலங்கை, பர்மா, சீனா போன்ற நாடுகளுக்கு பௌத்த தூதுவர்களை அனுப்பி தர்மத்தை நிலைநாட்ட அரும்பாடுபட்டார்.
அசோகச் சக்கரவர்த்தியின்நீதிநெறி தவறா ஆட்சிக்கு தக்க சான்று இந்திய சின்னமாக அசோகச் சின்னம் இன்றுவரை பயன்படுத்தப்பட்டுவருவதனைஅவதானிக்க முடியும்.
அவ்வாறான ஓர் மதம், இலங்கையில் எவ்வளவு தூரம் தன்னை ஒரு தர்மமமாகக் காட்டிக்கொண்டு, அதர்ம வழியில் சென்றுகொண்டிருப்பதை ஆட்சியாளர்கள் கண்மூடிப் பார்த்துக் கொண்டிருப்பது வேதனையிலும் வேதனை.
அன்று அசோகச் சக்கரவர்த்தி பௌத்தத்தின் மூலமாக தான் செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடிக் கொள்ளாமல் இருந்திருந்தால்அவரின் ஆட்சி நெறி தூற்றப்பட்டிருக்கும். அவரின் ஆட்சி கறைபடிந்த ஆட்சி என்று வரலாறுபேசியிருக்கும். ஆனால் அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து தர்மவழியில் சென்றார்அசோகர்.
ஆனால் அசோகரினால்இலங்கையில் பரப்பப்பட்டதாகச் சொல்லப்படும் பௌத்தம் இன்று எத்தனை தூரம் மதவாதமாகவும், இனவாதமாகவும் வளர்ந்து இலங்கையை இரத்தக்காடாக மாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை சற்றுச்சிந்தித்தாக வேண்டும்.
பௌத்தம் பாதுகாக்கப்படும், பௌத்த துறவிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கத்தினரும்பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்க, அது தன்னை இனவெறி, மதவெறி கொண்டதாககாட்டிக் கொண்டிருக்கிறது.
நேற்று முன்தினம்மட்டக்களப்பில் பௌத்த துறவி ஒருவர் கிராமசேவகர் மீது காட்டிய கோபமும், இனவெறிப்பேச்சும் இங்கே சொல்லில்வடிக்கமுடியாதவையாக இருக்கின்றன.
அன்பையும், அரவணைப்பும்,பரிவையும் காட்டும் ஒரு மதத்தின் குருவாக இருந்து கொண்டு குறித்த பிக்குவின் பேச்சுக்கள்சாதாரணமானவையாக நோக்க முடியாதுள்ளது.
மக்களை நெறிப்படுத்தவேண்டிய மதகுருவே சாதாரண குடிமகனை விடவும் அசிங்கத்தனமாக பேசியிருக்கின்றார் எனில்,தென்னிலங்கை பெரும்பான்மை மக்களின் மனங்களில் எவ்வாறான வக்கிரங்கள் படிந்து போயிருக்கின்றனஎன்பதை ஊகித்துக் கொள்ளமுடியும்.
நாட்டை ஆட்சி செய்யும்அரசாங்கத் தலைவர்கள் பௌத்தர்களாகவும், பௌத்த பாதுகாவலர்களாவும் இருக்க, அதே மதத்தின்பெயரால் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏனைய சிறுபான்மை இனங்கள் மீது கொண்டிருக்கும்காழ்ப்புனர்ச்சிக்கு முற்று ப் புள்ளிவைப்பதற்கு அதிகார வர்க்கம் முயற்சிக்கவில்லை.
ஒரு மதகுரு தன்னுடையநிலை மறந்து பேசுவாரெனில், ஏனைய மக்களை அவர் எவ்வாறு வழிப்படுத்துவார் என்பதை கற்பனையிலும்காணமுடியாது.
இந்த நாட்டில், இத்தனை அழிவிற்கும் காரணம் பௌத்தமும், சிங்களமும் தான் என்பதை ஏற்காத தரப்பு, மீண்டும்மீண்டும் தனக்கு கீழ் உள்ள அடக்கப்பட்ட மக்களை எள்ளிநகையாடுவது, எத்துனை துன்பியல்நிகழ்வு என்பதை அவர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்.
ஒருபுறத்தில், நாட்டில் நல்லிணக்கம், ஒற்றுமை, சமாதானம் என்று இன்றைய ஆட்சியாளர்கள் பேசிக்கொண்டிருக்க, மறுபுறத்தில் இனவாதமும், மதவாதமும் புத்துயிர் பெற்று வளர்ந்து கொண்டிருக்கிறதே அதை ஏன் இவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள் என்று சிந்திப்போமாயின், அரசாங்கத்திற்கும்அதிகாரிகளுக்கும் இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது தேவைப்படுகின்றது என்பது புலப்படுகிறது.
ஆக, நாட்டில் அவ்வப்போதுஇதுபோன்ற நிகழ்வுகள் நடந்தாலேயே ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியை கொண்டு நடத்த முடியும்என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.
நாட்டில் மதங்களிடையே நிறைந்து போயிருக்கும் அழுக்குகளை துடைத்து எறியும் வரை நல்லிணக்கத்தையோ அன்றி, அரசியல்தீர்வையோ பெற்றுவிட முடியாது.
மாறாக தமிழர் தரப்பில்இருந்து கேட்கப்படும் உரிமைகளை இனவாதமாக சித்தரிப்பதனால் வேறு ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை.
தொடர்ந்து இதுபோன்றஅடாவடித்தனமான சம்பவங்களை பெரும்பான்மைத்தரப்பினரால் மேற்கொள்ளப்படுமாயின் மீண்டும்இந்த நாட்டில் ஏற்படப்போகும் இரத்த ஆற்றைத் தடுக்க முடியாமல் போகும் என்பது மட்டும் உண்மை.
0 Comments