கடந்த 19 வருடங்களாக கல்முனையில் இருந்து பல ஆயிரம் பயிலுநர்களை பயிற்றுவித்த NAITA (நைட்டா)வின் மாவட்ட காரியாலயம் எதிர்வரும் 15ஆம் திகதியிலிருந்து அம்பாறைக்கு இடமாற்றப்படவுள்ளது.
இதற்கான அறிவுறுத்தலை எழுத்தில் மேற்படி தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் சி.கே.பஸ்நாயக்க அறிவித்துள்ளார்.
காலா காலமாக கல்முனையிலுள்ள பல காரியாலயங்கள் இவ்வாறு தூக்கி எடுத்துச் செல்லப்பட்ட வரலாற்று வரிசையில் சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தற்பொழுது NAITA(நைட்டா) அலுவலகம் இடம் மாற்றப்பட்டுள்ளது.
அம்பாறையில் இச்சபைக்கென பெரியபரப்பில் காரியாலயம் இருக்கும்போது கல்முனையில் மாதம் 20ஆயிரம் ருபா வாடகைகொடுத்து இருப்பது தொடர்பில் கணக்காய்வு முறைப்பாடு வந்துள்ள காரணத்தினால் இப்பணிமனை இடம் மாற்றப்படுகிறது என அவர் காரணம் தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அம்பாறை இங்கினியாகல வீதியிலுள்ள புதிய கட்டடத்தில் பணிமனை இயங்குவதற்கு வசதியாக இடமாற்ற வேலைகளை எடுக்குமாறு கல்முனையிலுள்ள மாவட்ட முகாமையாளரைக் கேட்டுள்ளார்.


0 Comments