Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு ஆர்ப்பாட்டம்

களுவாஞ்சிக்குடி அதார வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி, ஆதாரவைத்தியசாலையின் நலன்புரிச் சங்கம், அதன் செயலாளர் தலைமையில்
வைத்தியசாலைக்கு முன்னால் இன்று காலை ஆர்ப்பாட்டப் பேரணியை அமைதியான முறையில் நடாத்தியது.

அண்மையில் டிஸ்பென்சர் 34பேர் மட்டக்களப்பில் பயிற்சி பெற்று வெளியெறியுள்ளனர். அவர்களில் 19பேர் மட்டுமே கிழக்கிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இதுவும் இங்கு பணிபுரியும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 19 பேரை விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தாங்கள் அறிவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்த முக்கிய குறைபாடுகளைத் தீர்த்து வைப்பதற்கு வைத்திய அத்தியட்சகர், மாவட்ட மாகாண சுகாதாரப் பணிப்பாளர்கள் எமது தமிழ் அரசியல்வாதிகளும் அக்கறை செலுத்தவில்லையெனவும் சுட்டிக் காட்டினர்.
அத்துடன் கிழக்கு மாகாண ஒதுக்கீட்டில் களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்திசாலை உள்வாங்கப்படவில்லை என்பது ஒதுக்கீட்டு பட்டியலில் இருந்து தெரிந்து கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தனி தமிழ் தொகுதியாம் பட்டிருப்பு தொகுதியின் சுகாதார சேவைகளுக்குரிய ஒரே வைத்தியசாலையாக இருக்கும் இந்த வைத்தியசாலைக்கு ஏன் இந்த பாரபட்சம். மருந்தாளர் பற்றாக்குறை என்பது நோயாளர்களின் உயிரோடு விளையாடும் ஆபத்தான விடயம் என்பது உயரதிகாரிகளக்குப் புரியாமல் இருக்கின்றது? என்ற உணர்வு பூர்வமாக கேட்கின்றனர்.

இதுகுறித்து வைத்திய அத்தியடசகர் டாக்டர் சுகுணனிடம் வினவியபோது, நாளாந்தம் வெளிநோயளர் பிரிவிற்கு சராசரி 800 பேரும். கிளினிக்கிற்கு 250பேரும். விடுதியில் இருந்து சிகிச்சை பெறுவோர் 150 என மொத்தம் 1000பேருக்கு வைத்திய சாலையில் மருந்து விநியோகம் செய்வதற்கு 6 பாமசிஸ்றுக்கு பதிலாக ஒருவர் மட்டுமே பணிபுரிவதாகவும், 2டிஸ்பென்சருக்குப் பதிலாக ஒருவர் மட்டுமே பணிபுரிவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து பல வருடங்களாக கடிதங்கள் அனுப்பியும் பலன் ஏதும் நிடைக்கவில்லை என தெரிவித்தார். எனவே ஆர்ப்பாட்டக்காரர்கள் என்னை குறைகூறுவது பொருத்தமில்லை என்றும் கூறினார்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அணுகியபோது இங்கு மருந்தாளர் தட்டுப்பாடு மட்டுமல்ல வைத்திய நிபுணர்கள் பற்றாக் குறையும் இருக்கின்றது. நல்லாட்சி என்;று கூறிக் கொண்டு குறிப்பாக தமிழ் சமூகத்தை பின்தள்ளும், புறக்கணிக்கும் முயற்சிகளே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும். ஆதற்கு இந்த டிஸ்பென்சர் ஒதுக்கீடு முன்னுதாரணமாகின்றது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

34 பயிற்சி முடித்த மருந்தாளர்களில் 15 பேரை வெளி மாவட்டங்களுக்கு நியமிக்க மௌனம் காத்த கிழக்கு மாகாணசபையின் கையாலாகத் தனம் குறித்து தாங்கள் வெட்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாணத்தில் அதிகளவு வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் இதைத் தவிர்ப்பதற்கு போராட வேண்டிய மாகாண சபைக்குப் பதிலாக இதை எதிர்த்து நாம் களத்தில் இறங்கியிருக்கின்றோம்.  அரசியல் தலையீடுகள் மூலம் ஒரு சமூகத்திற்க சாதகமாகவம், இன்னொரு சமூகத்திற்கு பாதகமாகவும் நடந்து கொள்வதுதானா நல்லாட்சியின் வரைவிலக்கணமா என்று அவர்கள் கேட்கின்றனர்.








Post a Comment

0 Comments