எடுத்த எடுப்பிலேயே கவிதைத் துறையில் தேசிய ரீதியில் மத்தியஸ்தர்களுக்கிடையே நடைபெற்ற கவிதைப் போட்டியில் பிணக்கறுக்கக் கூடுவோம் வாரீர்' – என்ற தலைப்பில் கவிதை சமர்ப்பித்து, அண்மையில் அலரிமாளிகையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கரங்களால் பரிசு பெறும் பாக்கியத்தைப் பெற்றுள்ளார்.
ஜனாதிபதி கையால் விருது பெற்ற சூடு ஆறுவதற்குள் மற்றுமொரு விருதுக்கு சொந்தக்காரராகியுள்ளார் குருவூரான். கொழும்பிலுள்ள நியூசிலாந்து தூதுவரின் கரங்களால் 8 நாடுகளின் சமாதான தூதுவருக்கான சான்றிதழையும் பெற்று எமக்குப் பெருமை சேர்த்துள்ளார். அதே வேகத்தில் மண்முனை தென் எருவில் பிரதேசபையால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுமுள்ளார்.
கிரிக்கற்றில் தொடர் ஆட்டநாயகன் போல் இலக்கியதுறையில் ஆட்டநாயகனாக திகழ்கின்றார் கலாபூசணம் திருநாவுக்கரசு. இவர் மட்டக்களப்பு மாண்புறு குருக்கள்மடம் என்னும் பேரூர் வரலாற்று நூலை வெளியிட்டதன் மூலம் தன்னை இலக்கிய உலகில் சிறந்த முறையில் அடையாளப்படுத்திக் கொண்டார். அதன்மூலம் தமிழ்வளவன் என்னும் விருது வழங்கப்பட்டது.
2013ல் கலாபூசணம் விருதும் 2015ல் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள்திணைக்களத்தினால் வித்தகர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. விருதுகளின் நாயகனாக விளங்கும் இவர் இன்னும் விருதுகள் பெற்றிட வாழ்த்துகின்றது ..
0 Comments