மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 72 மணிநேரத்தில் 167.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பணிப்பாளர் கே.சூரியகுமார் தெரிவித்தார். அடை மழை காரணமாக பல வீதிகளில் நீர் தேங்கியுள்ளது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் தவணைப்பரீட்சைகள் பாடசாலைகளில் ஆரம்பமாகியுள்ளமையால் மழை காரணமாக மாணவர்களும் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
இவேவேளை, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பருவமழை ஆரம்பமாகியுள்ளதால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
0 Comments