Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அமைச்சர்கள், எம்.பி.க்களின் வெளிநாட்டுப் பயணங்கள் இரத்து

2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பமாகியது.
இன்று காலை 9 மணிக்கு, சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில், நாடாளுமன்றம் கூடியது. வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பின் வாக்கெடுப்பு இம்மாதம் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அதன் பின்னர் மூன்றாவது வாசிப்பான குழுநிலை விவாதம், ஆரம்பிக்கப்படும்.
இந்தக் காலப்பகுதியில், அரசாங்கத் தரப்பு அமைச்சர், பிரதியமைச்சர், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும், வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், அவர்கள் அனைவருக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதென அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments