நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது முழுமையான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எமது இலக்கினை அடைய சக்திமிக்க பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். சர்வதேச சந்தையை மறுசீரமைப்பு செய்யவேண்டிய தேவை உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்போது அத்தியாவசிய பொருட்களின் விலையான பருப்பு 10 ரூபாவாலும், சீனி 2 ரூபாவாலும் ,கேஸ் (GAS) 25 ரூபாவாலும், கிழங்கு 5 ரூபாவாலும், கருவாடு 5 ரூபாவாலும், மண்ணெண்ணெய் 5 ரூபாவாலும் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இது மக்களுக்கு நன்மையை ஏற்படுத்துவதாக ஒரு புறம் இருந்தாலும் , மறுபக்கம் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கான கட்டணத்தை தடை செய்து பெருந்தோட்ட கம்பனிகள் 5000 ஏக்கர் அளவிலான நிலங்களை மாத்திரமே வைத்திருக்க முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தோட்ட துறை பாரிய பங்கு வகிக்கிறது. எனினும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள கொடுக்கல் வாங்கல்கள் இன்று வரை பெரும் பிரச்சினையாகவே உள்ளது.
தமது உழைப்புக்கான ஊதியத்தை போராடி பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் தொழிலாளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் எந்த அளவு இது வெற்றி அளிக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதேவேளை, தேயிலை, இறப்பர், தென்னை போன்றவற்றின் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த வரவுசெலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


0 Comments