உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், மட்டக்களப்பு மற்றும் ஹட்டன் பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக இந்த இடமாற்றங்கள் இன்று திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரியாகவுள்ள பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.டி.பி.கே. ஹெற்றியாராச்சி ஹட்டன் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை ஹட்டன் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரியாகவுள்ள பிரதான பொலிஸ் பரிசோதகர் தயால் டி கஹவத்துர மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


0 Comments