வாகன போக்குவரத்துக்கள் தொடர்பான வீதி ஒழுங்கு விதிகளை மீறுவது தொடர்பாக விதிக்கப்படும் ஆகக்குறைந்த தண்டப்பணத்தை 2500 ரூபாவாக அதிகரிக்கும் யோசனைக்கு எதிராக தமது கைகளிலோ அல்லது மோட்டார் சைக்கிள்களிலோ கறுப்பு பட்டிகளை கட்டி பயணிக்குமாறு இலங்கை மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் சங்கம் மோட்டார் சைக்கிள் பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளது.
2017 லவு திட்டத்தில் வீதி போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் ஆகக் குறைந்த தண்டப்பணத்தை 2500 ரூபா வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் அதிகமாக மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களே பாதிக்கப்படுவார்கள் என்பதுடன் பொலிஸார் இலஞ்சம் பெறும் செயற்பாடுகளும் அதிகரிக்குமென சுட்டிக்காட்டியுள்ள அந்த சங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்பு பட்டிகளை கட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
0 Comments