வவுனியாவில் கடந்த பல மாதங்களாக வங்கி தன்னியக்க இயந்திரத்தின் மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாக நான்கு சந்தேக நபர்களை இன்று கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
வவுனியாவில் கடந்த சில மாதங்களாக வங்கிகளின் தன்னியக்க இயந்திரங்களின் மூலம் பணம் கொள்ளையிடப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. இதனையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.பெரேரா தலைமையில் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் இயந்திரங்களைப் பயன்படுத்தி அதனுள் சூட்சுமமான முறையில் கமராவினைப் பொருத்தி அட்டையின் இலக்கத்தினை தெரிந்து கொண்டு, அதன் பின்னர் அவ்விலக்கத்தைக் கொண்ட போலி அட்டையினை தயாரித்து அதன் மூலமே பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சந்தேகத்தின்அஅடிப்படையில் வவுனியாவைச் சேர்ந்த இருவரும் வெளிநாட்டில் வசித்துவந்த இலங்கையர் ஒருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து வங்கி தன்னியக்க இயந்திரங்களுக்கு பொருத்தப்படும் உபகரணங்கள் உட்பட இலத்திரனியல் பொருட்கள், வங்கி அட்டைகள் பல மீட்கப்பட்டுள்ளன.
இவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் வவுனியா பொலிவசார் மேலும் தெரிவித்தனர்.






0 Comments