Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

18 பேருக்கு அவிசாவளை மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை

தெரணியகல நூரி தோட்டத்தின் முகாமையாளர் நிஹால் பெரேரா வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்  தெரணியகல பிரதேசசபை முன்னாள் தலைவர் அத்தகொட்டா உட்பட குற்றம் நிரூபிக்கப்பட்ட 18 பேருக்கு அவிசாவளை மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் 21 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், மூன்று பேரை நிபந்தனையற்ற விடுதலை செய்வதற்கு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா அபேரத்ன உத்தரவிட்டார்.
நிஹால் பெரேரா கடந்த 2013 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 05 ஆம் திகதி காலை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்ட தெரணியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிக்க விஜேசிங்க எனப்படும் அத்தகொட்டா உள்ளிட்ட 18 பிரதிவாதிகளுக்கு இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவத்தின் போது, குறித்த முகாமையாளரின் காவலாளிகள் மூவரும் படுகாயமடைந்திருந்தனர்.

Post a Comment

0 Comments