Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வடக்கில் சில பிரதேசங்களில் இன்று காலை முதல் 10 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் இருக்காது

மின் விநியோக முறை கட்டமைப்பில் சில திருத்த வேலைகள் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வடக்கின் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும்.
இதன்படி யாழ்பாணத்தில் இரும்புவேம்படி, மனோகரா, சங்களாவத்தை, தேவரையாளி, திக்கம், மட்டுவில், கல்வயல், முத்துமாரி அம்மன் கோவிலடி, சரசாலை வடக்கு, ஆகிய பிரதேசங்களிலும்,
கிளிநொச்சியில். நாச்சிக்குடா, நாகபடுவான், முழங்கவில், குமுழமுனை, பல்லவராயன் கட்டு, வெள்ளாங்குளம், மூன்றாம்பிட்டி, SLLI கணேஷபுரம், 651ஆவது படைப்பிரிவு முகாம், 652ஆவது அதிரடி படை முகாம், 2ஆவது அதிரடிப்படைமுகாம், நாச்சிக்குடா கடற்படை முகாம், இயாஸ் இடங்களிலும்
வவுனியாவில்…நெளுக குளத்தில் இருந்து இராசேந்திர குளம் வரைக்கும், மன்னாரில் முருங்கனிலிருந்து தலைமன்னார் வரை, வங்காலை கடற்படை முகாம், வங்காலை நீர்ப்பாசன திணைக்களம், கமலாம்பிகை அரிசிஆலை, மாந்தை உப்பு உற்பத்தி நிலையம், மன்னார் நீர்பாசனத் திணைக்களம், மன்னர் தொலைத்தொடர்பு நிலையம், மன்னர் வைத்தியசாலை, விசேட அதிரடிப்படை முகாம், வங்காலைப்பாடு ஐஸ் தொழிற்சாலை, எருக்குப்பிட்டி பாம் கவுஸ், மீன்பிடிசமாசம், தலைமன்னார் கடற்படை முகாம், சீனத்துறைமுகம் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைபடும் என மின்சாரசபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments