அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இரசியங்களை பிரபல இணையத்தளம் ஒன்று வெளிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகின்றது.
ஒபாமாவின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் அதில் உள்ள தகவல்களை பிரபல விக்கிலீக்ஸ் இணையத்தளமே வெளியிட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில் விக்கிலீக்ஸ் ஒபாமாவின் மின்னஞ்சல் பற்றிய தகவல்களோடு முக்கிய விடயங்களையும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியானது bobama@ameritech.net. என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த மின்னஞ்சல் முகவரியுடன் 2008ம் ஆண்டு நடைபெற்ற ஒரு பரிமாற்றமும் வெளியிடப்பட்டுள்ளது.
ஜான் போடஸ்டா இவர் அமெரிக்க அதிபரின் நிர்வாக குழுவில் இடம்பெற்று இருந்த ஒருவராவார். கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அதே ஆண்டு நவம்பர் 15ம் திகதி நடைபெற்ற ஜி 20 மாநாட்டின் அழைப்பை ஒபாமா ஏற்க கூடாது என வலியுறுத்தி ஒபாமாவுக்கு மின்னஞ்சல் ஒன்றினை ஜான் போடஸ்டா அனுப்பி உள்ளார்.
இந்த மின்னஞ்சலில் ஒபாமா ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்டால் ஏற்படும் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் தொடர்பிலும் போடஸ்டா அறியத்தந்துள்ளார். அந்தத் தகவலையும் விக்கிலீக்ஸ் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை போடஸ்டாவின் 23 ஆயிரம் மின்னஞ்சல்கள் தகவலும் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவிக்க வெள்ளை மாளிகை மறுத்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments