யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சகல பல்கலைக்கழகங்களிலும் நாளை ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று கொழும்பில் அந்த ஒன்றியத்தினால் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டுள்ளது. அந்த சந்திப்பில் உரையாற்றிய ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லகிரு வீரசேகர தெரிவித்துள்ளதாவது,
இந்த சம்பவத்தை கொலையாகவே நாம் கருதுகின்றோம். இதில் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். அதற்காக நாம் முன்னிற்போம். இந்த சம்பவத்திற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். இதன்படி இதற்கு எதிராக திங்கட்கிழமை நாம் சகல பல்கலைக்கழகங்களிலும் போராட்டங்களை நடத்துவோம். என அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments