கிழக்கு மாகாண சிறுநீரக நோயாளிகளின் நலன் கருதி இரத்த சுத்திகரிப்பு சேவை நிலையம் மட்டக்களப்பில் முதன்முறையாக சென் செபஸ்தியான் வீதியில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு ஜி.வி வைத்தியசாலை மற்றும் கொழும்பு வெஸ்டன் இன்போமரி பிரைவேட் லிமிட்டட் வைத்தியசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிலையத்தை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் வித்தியாஜோதி றிஸ்வி சரீப் திறந்து வைத்தார்.
இதுவரை காலமும் கிழக்கு மாகாணத்திலிருந்து சிறுநீரக நோயாளர்கள் இரத்த சுத்திகரிப்பை மேற்கொள்வதற்காக கொழும்பு மற்றும் கண்டி போன்ற இடங்களுக்குச் சென்றனர்.
இதன் காரணமாக மாவட்டத்து மக்கள் பெரும் பணச் செலுவுடன் தங்களின் இரத்தப் பரிசோதனைக்காக பல்வேறுபட்ட அசௌகரிங்களுக்கு மத்தியில் மேற்கொண்டிருந்தமை
0 Comments