Advertisement

Responsive Advertisement

கிழக்கு அலப்போ முற்றாக அழிக்கப்படும் அபாயம்- ஐநா

ரஸ்யா ஆதரவுடனான குண்டுவீச்சு தொடர்ந்தால் கிறிஸ்மஸிற்கு முன்னர் கிழக்கு அலப்போ முற்றாக அழிந்துவிடும் என ஐக்கியநாடுகள் பிரதிநிதியொருவர் எச்சரித்துள்ளார்.
சிரியாவிற்கான ஐக்கியநாடுகளின் விசேட தூதுவர் ஸ்டாவன் டி மிஸ்டுராவே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.முற்றுகைக்குள்ளாகியுள்ள இந்த நகரத்தின் மனிதாபிமான நெருக்கடி மிகப்பெரியது என குறிப்பிட்டுள்ள அவர் இன்னொரு ஸ்ரெபெர்னிகா இன்னொரு ருவாண்டா தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

ALEPPO, SYRIA - JULY 11: A view of Ikeda refugee camp, northern of Aleppo, Syria on July 11, 2014. Refugees try to hold on life under difficult conditions due to high temperatures in the area. (Photo by Mamun Ebu Omer/Anadolu Agency/Getty Images)
ரஸ்யாவும் சிரியாவும் குண்டுவீச்சினை நிறுத்தினால், நான் நேரடியாக அலப்போ நகரிற்கு சென்று அங்குள்ள இஸ்லாமியதீவிரவாதிகளை நகரின் வெளியே அழைத்துச்செல்ல தயாராகவுள்ளேன்,
முற்றுகைக்குள்ளான நகரில் தீவிரவாதிகள் உள்ளதை காரணம்காட்டி அந்த நகரை முற்றுகையிட்டு அங்குள்ள 3 இலட்சம் மக்களை ரஸ்யா கொலைசெய்யுமானால் வரலாறு ரஸ்யாவை குப்பைத்தொட்டியில் வீசும், இந்த 3 இலட்சம் மக்களில் ஓரு இலட்சம் பேர் குழந்தைகள்
விமானக்குண்டுவீச்சு இந்த விதத்தில் இடம்பெற்றால் ஆகக்குறைந்தது இரண்டு இரண்டரை மாதங்களிற்குள் கிழக்கு அலப்போ முழுவதும் அழிக்கப்பட்டுவிடும்,ஆயிரக்கணக்கான சிரியா மக்கள் கொல்லப்படுவார்கள், மேலும் பலர் காயமடைவார்கள்,பலர் அகதியாவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிரியாவின் புராதான நகரத்தை அழிப்பதற்கு ரஸ்யா தயாரா என அந்த நாட்டை நோக்கி கேள்விஎழுப்பியுள்ள அவர் தீவிரவாத குழு அந்த நகரத்திலிருந்து வெளியேற மறுப்பதன் மூலம் 3 இலட்சம் மக்களின் தலைவிதியை தீர்மானிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments