Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு வாழைச்சேனையில் புத்தக கண்காட்சி

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்த புத்தக கண்காட்சி நேற்று(20) இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப், உதவி கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.கே.றஹ்மான், ஓட்டமாவடி கோட்ட கல்வி பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜூனைட் ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
இதில் பிரதேசத்தின் மறைந்த கல்விமான்களின் பெயர்களைக் கொண்டு ஆறு காட்சிக் கூடங்களில் மூவாயிரத்திற்கும் அதிகமான நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த புத்தக கண்காட்சியை பிரதேச பாடசாலைகளின் மாணவர்களும் பொது மக்களும் பார்வையிட்டனர்.

Post a Comment

0 Comments