Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் வாசிப்பு திறன் மேம்படுத்தல் பாசறை

மத்திய மாகாண சபையின் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மத்திய மாகாணத்தில் உள்ள கஷ்ட பிரதேச பாடசாலை சிறுவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்துல் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டம் கடந்தவாரம் நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட கிரேட்வெஸ்டன் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதன் போது தரம் 8 முதல் தரம் 10 வரையான மாணவர்களுக்கு வாசிப்பு திறனை மேம்படுத்தும் பயிற்சி பாசறை நடாத்தப்பட்டது. இங்கு மாணவரின் வாசிப்பு, இரசணை, புத்தாக்கம், மனிதாபிமானம் போன்ற பல விடயங்கள் விருத்தி செய்யும் வகையில் செயற்பாடுகள் நடைபெற்றன.
இவ்விடயம் பாடசாலையின் ஆசிரியர்களுக்கும் பெற்றுக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் பாடசாலையின் நூலகத்திற்கு பெறுமதியான நூல்களும் பெற்றக் கொடுக்கப்பட்டன.

Post a Comment

0 Comments