Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பெறுமதியான மாணிக்க கற்களுடன் கட்டுநாயக்கவில் சீன பெண் கைது

சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை மாணிக்க கற்களை வெளிநாட்டுக்கு கடத்த முயற்சித்த சீன பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சீனாவுக்கு செல்வதற்காக வருகை தந்திருந்த போது அவரின் பயண பொதியை சோதனையிட்ட போது அதற்குள்ளிருந்து ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான 247 மாணிக்கக் கற்களை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக 26 வயதுடைய சீன பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments