Home » » யாழ் கொக்குவில் குளப்பிட்டிப் பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தலை சிதறிப் பலி

யாழ் கொக்குவில் குளப்பிட்டிப் பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தலை சிதறிப் பலி

யாழ் பல்கலைக்கழகத்தில் 3ம் வருட கலைப்பீட மாணவர்களான சுலக்சன் மற்றும் கஜன் ஆகியோர் நேற்று நள்ளிரவு கொக்குவில் குளப்பிட்டிச்சந்திப் பகுதயில் மோட்டார் சைக்கிளில் சென்ற வேளை, துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுக்கு இலக்காகி மதிலுடன் மோதுண்டு மரணமாகியுள்ளனர் என
 பொதுமக்கள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த நேரத்தில் 3 துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் கேட்டதை வைத்தே அவர்கள் அவ்வாறு தெரிவித்துள்ளனர். ஆனாலும் குறித்த மாணவர்கள்  இருவரும் பொலிசார் மறிக்க மறிக்க ஓடியிருக்கலாம் எனவும் அதனாலேயே பொலிசார் இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருக்காலம் என சில பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். பொலிசார் இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்களா? அல்லது இவர்களை நிறுத்துவதற்காக மேல் வெடி வைத்த போது இவர்கள் பதற்றத்தில் மதிலில் மோதி உயிரிழந்தார்களா?? என்பதை பிரேதபரிசோதனை முடிவின் மூலமே அறிய முடியும். அத்துடன் இவர்கள் எவ்வாறு உயிரிழந்தனர் என்பதற்கு அப்பகுதிக் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரீவி. கமராக்கள் சாட்சியாகப் பதில் சொல்லும்.
இறந்த இடத்திற்கு அருகில் உள்ள கடைக் கதவில்  சீறிப் பாய்ந்துள்ள இரத்தம்


குறித்த மாணவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள்ல வீழ்ந்த இடத்தில் இரத்தக்கறை கறைகள் பரவிக் காணப்படுகின்றன. அத்துடன் அவர்கள் வீழந்த இடத்தில் இரத்தம் தோய்ந்த கை விரல்களின் அடையாளம் மதில் சுவர் மீது படிந்துள்ளதுடன் அருகில் இருந்த கடைப்பகுதிக்கும் இரத்தம் பீறிட்டுச் சிதறியுள்ளதையும் புகைப்படங்களின் மூலம் அறியலாம்.

குறித்த மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தை  அண்டிய பிரதேசத்தில் இருந்து கொக்குவில் பகுதியை நோக்கி செல்லும் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இம் மாணவர்களுடன் அன்றைய தினம் இரவு 10.30 மணி வரைக்கும் கூட இருந்த நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் வீழ்ந்து கிடந்துள்ள குறுட்டு ஒழுங்கை ( தனி வீட்டுக்குச் செல்லும் பாதை)
மோட்டார் சைக்கிள் மோதியதால் வெடிப்புக்குள்ளாகிய அபி பேக்கரிச் சுவர்


இச் சம்பவம் இடம்பெற்ற நேரம் குறித்த மாணவர்கள் புறப்பட்டு அரை மணித்தியாலங்களின் பின்னரே வெடிச்சத்தம் கேட்டதாக என அவர்கள் கூறுகின்றனர். அவ்வாறாயின் பல்கலைக்கழக சுற்றாடலில் இருந்து கொக்குவில் குளப்பிட்டச் சந்திவரைக்குமான 3 கிலோ மீற்றர் துாரத்துக்கும் குறைவான இடத்திற்கு அவர்கள் செல்ல அரை மணித்தியாலங்கள் பிடித்தது என்? என கடும் சந்தேகம் எழுகின்றது.
இரத்தக் கறைகள் இல்லாது கிடக்கும் அவர்கள் பாதணி


குறித்த மாணவர்கள் இருவரும் பொலிசார் மறிக்கும் போது ஓடியிருந்தால் நிச்சயம் மாணவர்கள் ஏதோ ஒரு குற்றப் பின்னணியுடன் தொடர்புபட்டிருக்கலாம் எனவும் அப்பகுதியில் நின்ற சில பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த மாணவர்களின் இறப்பு  எவ்வாறு ஏற்பட்டது என்ற பிரேத பரிசோதனை முடிவும் மாணவர்களைச் சுட்டது பொலிசாரா?? என்பதையும் அறிந்த பின்னரே இவர்களின் இறப்புத் தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகும். யாழ் போதனா வைத்தியசாலை வட்டாரங்களுடனும் பொலிசாருடனும்  எமது ஊடகவியலாளர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். விபரங்கள் கிடைத்தவுடன் முழுமையான தகவல்களை நாம் நிச்சயம் வெளியிடுவோம். அதுவரை தொடர்பில் இருங்கள்...

இதே வேளை குறித்த பல்கலைக்கழக மாணவர்களின் இறப்பை வைத்து பல அரசியல் கட்சிகள் சுயலாப அரசியல் நடவடிக்கையில் இறங்கக்கூடும். அத்துடன் பல்வேறுபட்ட தரப்புக்களும் பல்கலைக்கழ மாணவர்களைக் குழப்பி பாரிய குழப்பநிலையை யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தவும் முயலும். ஆகவே பல்கலைக்கழக மாணவர்கள் இறப்புத் தொடர்பான முழு விபரங்கள் வெளி வரும் வரை பொறுமை காப்பது அவசியம் என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றச்சம்பவம் இடம்பெற்ற இடத்தில் தடயங்கள்
பொலிசாரால் அடையாளப்படுத்தப்படும் குற்றப் பிரதேசம்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |