வவுனியா, தரணிக்குளத்தில் புதன்கிழமை பி.பகல் 2.20 மணியளவில் மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, தரணிக்குளம் பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் 12ம் தர மாணவர்கள் பாடசாலை அருகில் உள்ள கடை உரிமையாளருடன் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பில் முடிந்துள்ளது.
இச்சம்பவம் புதன்கிழமை பாடசாலை முடிவடைந்த பின்னர் ஏற்பட்டுள்ளது.இக் கைகலப்பில் குளிர்பான போத்தல்கள் மற்றும் மிளகாய் தூள் போன்றவற்றினால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் கடை உரிமையாளரின் மகன் காயப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய ஆறு மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் கைது செய்யப்பட்டு ஈச்சங்குளம் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments