Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நவீனத்தும் தமிழர்களின் பண்பாடுகளை அழிக்கின்றது – மட்டக்களப்பில் நடைபெற்ற நவராத்திரி நிகழ்வில் கவலை தெரிவிப்பு

வீனத்துவமான வருகை காரணமாக தமிழர்களின் கலைகலாசார பண்பாடுகள் அழிக்கப்படும் நிலையேற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவராத்திரியை சிறப்பிக்கும் பட்டிமன்ற ஆரம்ப நிகழ்வின்போதே இந்த கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாமாங்கம் விக்னேஸ்வரர் திருத்தொண்டர் சபையினர் ஏற்பாடுசெய்த நிகழ்வு இன்று மாலை விக்னேஸ்வரர் திருத்தொண்டர் சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நவராத்திரி விழாவில் விசேட பட்டிமன்றம் நிகழ்வும் நடைபெற்றது.இந்த பட்டிமன்ற நிகழ்விலேயே இந்த கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாமாங்கம் விக்னேஸ்வரர் திருத்தொண்டர் சபையின் தலைவர் இ.சண்முகராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வர்த்தகர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது நவராத்திரியை முன்னிட்டு விசேட பூஜைவழிபாடுகள் நடைபெற்றதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

விசேடமாக நவராத்திரி தினத்தினை சிறப்பிக்கும் வகையில் புதுக்குடியிருப்பு கதிரவன் இன்பராஜன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றுதுடன் பல்வேறு கலை நிகழ்களும் நடைபெற்றன.


















Post a Comment

0 Comments