மட்டக்களப்பு – ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 6 சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஏறாவூரில் தாயும் மகளும் கடந்த செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட நிலையில், சடலங்களாக மீட்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களால் திருடப்பட்ட தங்க நகைகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
0 Comments