Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு - ஏறாவூர் இரட்டைப் படுகொலை : கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

மட்டக்களப்பு -  ஏறாவூர் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா, நேற்றுத் திங்கட்கிழமை (19) பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

ஏறாவூர் - முகாந்திரம் வீதியை அண்மித்த பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 11ஆம் திகதியன்று, தாயும் மகளும்; கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கடந்த சனிக்கிழமையன்று (17) கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கயும் நேற்றுத் திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Post a Comment

0 Comments