Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சந்தேக நபர்களை தண்டிக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது!

சந்தேக நபர்களை தண்டிக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அண்மையில் கல்கமுவ நீதிமன்ற புதிய கட்டட அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
பாரிய குற்ற செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்திருக்கலாம். எனினும் அவர்களை தண்டிக்கும் அதிகாரம் நீதிமன்றிற்கே காணப்படுகின்றது.
நீதியை நிலை நாட்டும் செயற்பாட்டிற்கு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாப்பது மிகவும் அவசியமானது.
கடந்த காலங்களில் சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாக்கப்படாத நிலைமை காணப்பட்டது. இதனால் நாட்டில் பாரியளவில் தொடர் குற்றச் செயல்கள் இடம்பெற்றன.
சாட்சியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் சட்ட கட்டமைப்பு உருவாக்கப்படாமை இதற்கான முக்கிய காரணியாக அமைந்திருந்தது.
எனினும் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் திகதி சாட்சியாளர் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments