நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்குடன் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதே இந்த வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.
2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத் தயாரிப்புக்காக திருகோணமலை மக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கைகளில் கலந்து கொண்ட போதே ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
0 Comments