முல்லைத்தீவு மாந்தைகிழக்கு வன்னிவிளாங்குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு ள்ளானதில் மோட்டார் சையிக்கிள் செலுத்திச் சென்ற இரண்டுபிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 14 வயதுடைய அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியாசலையில் அனுதிக்கபபட்டுள்ளார்.
முhங்குளம் துணுக்காய் வீதியின் வன்னிவிளாங்குளம் பகுதியில் இன்று 7 மணியளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வானம் ஒன்றுடன் பின்னால் மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த பெண் ஒருவர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இரண்டு பிள்ளைகளின் தாயான அம்பாள்புரம் வன்னிவிளாங்குளத்தைச் சேர்ந்த இரவிக்குமார் இன்பமலர் வயது 38 என்ற பெண் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இவருடன் பயணித்த இவரது மகனான 14 வயதுடைய இரவிக்குமார் கீதன் என்பவர் படுகாமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments