மனிதன் மனிதனாக வாழ்வதற்கு அறநெறியை பின்பற்ற வேண்டும். எவர் எந்த சமயத்தையும் சார்ந்தவராக இருந்தாலும் அவர் அவர்கள் மதத்தில் கூறப்பட்டவாறு சமய நல்லொழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட திருவள்ளுவர் சிலைகளில் முதல் சிலையை அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் பிரதிஷ்டை செய்ததன் பின் அங்கு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தனது உரையில் தெரிவித்தாவது,
கடந்த அரசாங்கத்தில் இவ்வாறான சிலை ஒன்றினை வைப்பதற்காக முற்பட்டிருந்தால் இனங்களுக்கிடையில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும். அதேவேளை இன்று நல்லாட்சி அரசாங்கத்தில் ஒற்றுமையை வழியுறுத்துவதனால் இன்றைய நாள் பொன்னான நாளாக இனங்களுக்கிடையில் மாறியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்.
பாடசாலை மாணவர்களுக்கிடையில் கல்வி முன்னேற்றத்தில் பல்வேறு மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த வகையில் துரித கல்வி அடிப்படையில் முன்னெடுக்கபப்படும் பாடநெறிகளில் மாணவர்கள் அதிக அக்கறைகள் கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில் கல்வி நடவடிக்கைகள் மந்தகதியில் முன்னெடுக்கப்பட்டாலும், பாட மனனங்கள் மற்றும் செயற்பாடுகள் தாமதமாகவே செய்வதற்கு மாணவர்கள் மத்தியில் வளர்ச்சியின்மை காணப்பட்டது. ஆனால் தற்பொழுது மாணவர்கள் முயற்சியுடையவர்களாக மாற்றம் பெற்றுள்ளனர்.
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் குறபாற்க்கள் ஒவ்வொன்றும் புனிதமானது. இவைகளை மனனம் செய்யும் பொழுது எழிதில் சுருக்கமாக விடைகளை அறிந்து கொள்ளும் மனபாங்கு வந்துவிடும் என தெரிவித்தார்.
இங்கு மதங்களுக்கிடையிலும், இனங்களுக்கிடையிலும் பாரிய ஒற்றுமை நிலவுகின்றது. இந்த வகையில் இந்த ஒற்றுமையை முன்னெடுத்து செல்ல அனைத்து இனங்களும் ஒன்றுப்பட வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கம் அதன் வேலைத்திட்டங்களில் ஒற்றுமையை கடைப்பிடிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. அந்த வகையில் நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் வாழ்கின்ற மக்களிடையில் ஒற்றுமையை வலுப்படுத்தினால் நாட்டின் எதிர்காலம் சுபிட்சம் அடையும் என இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments