Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு திருப்பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்ல மாணவி தேசிய கபடி குழுவிற்குத் தெரிவு

மட்டக்களப்பு - திருப்பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்லத்தில் தங்கியிருந்து
கல்வி பயின்று வரும் ர.சந்திரகலா, என்ற மாணவி தேசிய கபடி குழுவிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு - திருப்பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்லத்தில் தங்கியிருந்து கல்வி பயின்று வரும் ர.சந்திரகலா, உ.சாந்தி ஆகிய இருமாணவிகளும் மாத்தறையில் கடந்த வாரம் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பங்கு பற்றும் தேசிய மட்ட கபடி விளையாட்டுப் போட்டியில் பங்கு பற்றி 2 ஆம் இடத்தினை பெற்று வெள்ளிப் பதங்கம் வென்றதுடன் சான்றிழிதழையும் பெற்று  திலகவதியார் மகளிர் இல்லத்திற்கும் அவர்கள் கல்வி பயின்ற மட்/பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கும்; பெருமையைத் தேடித் தந்துள்ளார்கள் என திலகவதியார் மகளிர் இல்லத்தை வழிநாடாத்திவரும்; சமூக நலன்புரி அமைப்பின் இணைப்பாளர் திருமதி.சிவசுந்தரி பிரபாகரன் தெரிவித்தார்

இந்நிலையில் ர.சந்திரகலா என்ற மாணவி கபடி விளையாட்டுப் போட்டியில் தலைவியாகவும் இருந்து செயற்பட்டுவருவதுடன், தேசிய கபடி குழுவிலும் தனது பெயரினை பதிவு செய்துள்ளதாக திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியலய அதிபர் எஸ்.உதயகுமார் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments