Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வற் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்தது

வற் (வரி) திருத்தச்  சட்டமூலத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த சட்டமூலம் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய சட்ட மூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் முதல் வற் வரியை அரசாங்கம் அதிகரிக்க நடவடிக்கையெடுத்திருந்த போதும் அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது செயற்படுத்தப்பட்டமையினால் அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இதனை தொடர்ந்து அரசாங்கம் அது தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முயற்சித்த போதும் அது அரசியலமைப்புக்கு முரணானது என நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து அந்த சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments