அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஸ்டார்க், கணைக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிட்னியில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியின் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அவரது இடது கணைக்காலில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
பயிற்சியின் போது, பயிற்சி உபகரணமொன்றுடன் அவர் மோதியுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்தே அவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தென்னாபிரிக்க அணிக்கெதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தொடரிலிருந்து, ஜேம்ஸ் ஃபோக்னர், ஷோன் மார்ஷ் இருவரும் காயம் காரணமாக ஏற்கெனவே வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: