Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழ் மொழியில் தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை முன்வைக்க

தமிழ் மொழியில் தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை  முன்வைக்க  பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கங்கள் இரண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி 0766 22 49 49 மற்றும் 0766 22 63 63 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலம் தமிழில் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலுள்ள மக்களுக்காக இந்த புதிய இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment

0 Comments