கடந்த காலங்களில் நாட்டில் அடிக்கடி மின் துண்டிப்புகள் இடம்பெற்றமைக்கு நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையமே காரணமாக அமைந்துள்ளதாக கோப் (COPE) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மூன்று சந்தர்ப்பங்களில் நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி இரவு 11.53 அளவில் முதலாவது மின் தடை ஏற்பட்டதுடன், 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி பிற்பகல் 2.04 அளவில் மீண்டும் நாடு பூராகவும் மின் விநியோகம் தடைப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி பிற்பகல் 2.20 அளவில் மூன்றாவது முறையாக நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டது.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் உரிய முறையில் மின்பிறப்பாக்கி பராமரிக்கப்படாதமையே இந்த மின் தடைக்கு பிரதான காரணம் என கோப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments