Advertisement

Responsive Advertisement

யாழ் பல்கலைக்கழக சிங்கள் மாணவர்களின் பெற்றோர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களின் பெற்றோர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் தமது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கிடையாது எனவும் அங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அவர்கள் ஜனாதிபதியிடம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பின் போது யாழ் பல்கலைக்கழக உபவேந்தரும் கலந்துக்கொள்ளவுள்ளார்.
அண்மையில் அந்தப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்குமிடையே மோதலொன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments