மோட்டார் வாகன சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், சிறார்கள் வாகனம் ஓட்டுதல், உரிமம் இன்றி வாகனங்களை ஓட்டுவது போன்ற விதிமீறல்களைத் தடுப்பதற்கான சட்டத்தில், கடுமையான பிரிவுகளைச் சேர்க்க இந்தச் சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கவும் இந்தச் சட்டம் வழி செய்கிறது.
அபராத கட்டண அறிவிப்புகள்
குடி போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் வாகனத்தில் காப்பீடு இல்லாமல் ஓட்டினால் ரூ.2 ஆயிரம் அபராதம் அல்லது சிறை தண்டனை வாகனத்தை தலைக்கவசம் அணியாமல் ஓட்டினால் 2 ஆயிரம் அபராதம் மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும் வாகனத்தை அதி வேகமாக ஓட்டினால் 1000 முதல் 4000 வரை அபராதம்
இழப்பீடு தொகை அதிகரிப்பு:
வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் 10 லட்சம் வரை இழப்பீடு தொகை வழங்கப்படும்
வாகன விபத்துக்கான இழப்பீடு தொகை ரூ.25ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு
0 Comments