காட்டு யானைகளின் நடமாட்டம் நிறைந்த பகுதிகளுடாக பயணிக்கும் ரயில்களுக்கு வேகக்கட்டுப்பாட்டை விதிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
செட்டிக்குளம் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு 4 காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை ரயில்வே திணைக்கள அதிகாரிகளுக்கும் வன விலங்குகள் திணைக்கள அதிகாரிகளுக்குமிடையே நடத்தப்பட்ட கலந்துரையாடலை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையிலும், மதவாச்சியிலிருந்து கிளிநொச்சி வரையிலும் ரயில் மார்க்கங்களில் வேகக்கட்டுப்பாட்டை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரயில் மார்க்கங்களின் வளைவுகள் அமைந்துள்ள இடங்களில் காணப்படும் காட்டுப் பகுதிகளை வெட்ட வெளியாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
0 Comments