ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் கலந்துக்கொள்வதை தவிர்த்துக்கொள்ளும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்று மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி எதிர்வரும் 4ஆம் திகதிக்கு முன்னர் அவர்கள் இத்தாலிக்கு பயணமாகுவதற்கு திட்டமிட்டுள்ளதுடன் மாநாடு நடைபெறும் 4ஆம் திகதி மகிந்த ராஜபக்ஷ இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் வகித்த கட்சி பதவிகள் அவர்களிடமிருந்து பரிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு மகிந்த ராஜபக்ஷ எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» சு.க மாநாட்டை புறக்கணித்து வெளிநாடு செல்ல திட்டமிடும் மகிந்த
சு.க மாநாட்டை புறக்கணித்து வெளிநாடு செல்ல திட்டமிடும் மகிந்த
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: