கிழக்கு மாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சில ஊடகங்கள் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள இராணுவ முகாம்களில் 64 முகாம்கள் அகற்றப்படவுள்ளதாக சில ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு தற்போது காணப்படும் சுமூகமான நிலையை தொடர்ந்தும் பேணுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments