நேற்று நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் இரகசியமான ஆவணமாகும் எனவும் இதனை யாரேனும் வைத்திருப்பத தண்டனைக்குறிய குற்றமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக வினாப்பத்திரங்களை வைத்திருத்தல், பிரதிபண்ணுதல், புகைப்படங்களை வைத்திருத்தல், விற்பனை செய்தல், அச்சிடுதல், பத்திரிகைகளிலும், வாராந்த சஞ்சிகைகளிலும் வெளியிடுதல் மற்றும் ஏனைய செயற்பாட்டுக்களின் மூலம் பகிரங்கப்படுத்துதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
எவரேனும் ஒருவர் அல்லது நிறுவனம் எந்த வகையிலாவது இந்த உத்தரவை மீறும்பட்சத்தில் அருகாமையிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது பொலிஸ் தலைமையத்திற்கு அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பில் திணைக்களத்திற்கு நேரடியாக தொலைபேசி அழைப்பை மேற்கொள்ள முடியும். இதற்கான தொலைபேசி இலக்கம் 1911 ஆகும். பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 ஊடாகவும் இந்தத் தகவல்களைத் தெரிவிக்க முடியும். என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments